by Vignesh Perumal on | 2025-04-08 09:39 AM
ஒசூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஏப்.7 இல் திப்பசந்திரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் திருட்டு நடந்துள்ளது. ஹரிஷ் (33), தீனா (24), நாகராஜ் (24), திருசபரி (25), சந்தோஷ் (20), ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கடையின் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், இந்த திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருடப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்