by Vignesh Perumal on | 2025-04-08 09:29 AM
இன்று (ஏப்ரல் 8, 2025) இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் அதிகாலை 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து இல்லை என்றும் அந்நாட்டின் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.