by Vignesh Perumal on | 2025-04-08 09:18 AM
பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தீ மிதித்து வழிபாடு செய்தார். இந்த ஆண்டு குண்டம் திருவிழா மார்ச் 24 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புக்காக 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கோயில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பட்டிமன்றம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றன.