by Vignesh Perumal on | 2025-04-08 08:55 AM
திருநெல்வேலி மாவட்டம் டவுன் பாறையடியை அடுத்த குருநாதன் கோயில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரை அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் சிவா மற்றும் விஷால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து மீட்ட காவல்துறையினர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் அதில் இந்த கொலை பெண் தகராறு தொடர்பாக நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.