by Vignesh Perumal on | 2025-04-08 08:45 AM
கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நேற்று (ஏப்ரல் 7, 2025) காலை முதல் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனை சுமார் 9 மணி நேரம் நீடித்தது.
அமைச்சர் நேருவின் சென்னை மற்றும் திருச்சி இல்லங்களிலும் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.