by Vignesh Perumal on | 2025-04-08 07:59 AM
கோவை மாநகரப் போலீசார், 37 வயதான மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெபராஜ் என்பவர் 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜான் ஜெபராஜின் வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ளவரை தேட தனிப்படை அமைப்பு கடந்தாண்டு மே 21ம் தேதி அவரின் வீட்டில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தற்போது இதனை தனது வீட்டில் கூறியதை அடுத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.