by Vignesh Perumal on | 2025-04-06 08:49 PM
குஜராத் மாநிலத்தில் பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சமண முனிவர் சாந்திசாகருக்கு சூரத் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வதோதராவைச் சேர்ந்த 19 வயது பெண் தனது குடும்பத்தினருடன் சூரத் அருகேயுள்ள திமாலியாவாத் பகுதியில் இருந்த சமண ஆலயத்திற்கு சாந்திசாகரின் பிரசங்கத்தைக் கேட்கச் சென்றார். இரவு நேரத்தில் பிரசங்கம் நடைபெறும் என சாந்திசாகர் கூறியதால், அவர்கள் அங்கேயே தங்குமாறு கூறினார்.சடங்குகள் செய்வதாகக் கூறி சந்தன மரக் கட்டைகளால் சூழப்பட்ட வட்டத்திற்குள் அவர்களை அமர வைத்து மந்திரங்களை உச்சரிக்கச் சொன்ன சாந்திசாகர், யாரும் தனது அனுமதியின்றி வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவிட்டார். பின்னர் அந்தப் பெண்ணை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, தன்னை ஒரு நண்பனைப் போல் நினைத்து நிர்வாணப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.அதன்பின்னர், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அப்பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை வெளியே கூறியதை அடுத்து சாந்திசாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை மற்றும் 32 சாட்சிகளின் வாக்குமூலங்கள் முக்கிய ஆதாரங்களாக இருந்தன.இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சாந்திசாகருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே 2017ஆம் ஆண்டு முதல் சாந்திசாகர் சிறையில் இருந்து வருவதால், அவர் இன்னும் 2.5 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!