by Muthukamatchi on | 2025-04-06 08:47 PM
தேனியில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் வயல்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் வீட்டில் புகுந்த முருகன் மற்றும் அவர் மகன் ராஜபாண்டி கோழிகளை திருடி உள்ளனர். இவர்களை பிரபாகரனின் தந்தை பரமன் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.முருகன் மற்றும் ராஜபாண்டி குறித்து பிரபாகரன் ஊர் முழுவதும் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மகன் ராஜபாண்டி ஆகிய இருவரும் பிரபாகரனை கொலை செய்ததாக வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் திரு.பாஸ்கரன் தலைமையிலும், வீரபாண்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சந்திரன் உதவியுடன், நடைபெற்று வந்த நிலையில், ராஜபாண்டி தற்கொலை செய்து கொண்டார்.தொடர்ந்து முருகன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று முருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து நீதிபதி திரு.சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.
தேனி ஆண்டிபட்டி தாலுகா நிருபர் G.மீனாட்சிசுந்தர்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!