by Vignesh Perumal on | 2025-04-06 08:29 PM
பத்திரிகையாளர் மன்றத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் இன்று (ஏப்ரல் 6, 2025) அறிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக தமிழக அரசு ₹2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர் நல நிதிக்காக வழங்கப்பட்டு வந்த ₹5 லட்சம் உதவித்தொகை ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ₹2 கோடியே 40 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் செய்தியாளர் அங்கீகார அட்டை போன்ற பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் தகவல்கள் மூலம், பத்திரிகையாளர் மன்றம் மற்றும் பத்திரிகையாளர் நலனுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவது தெரிய வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!