by Vignesh Perumal on | 2025-04-06 02:03 PM
டெல்லி வாஸிராபாத் பகுதியில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இன்று (ஏப்ரல் 6, 2025) தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபத்தில் சேதமடைந்த வாகனங்களின் எண்ணிக்கை 345 என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 260 இருசக்கர வாகனங்களும், 85 கார்களும் அடங்கும். கடந்த சில நாட்களில் வாஸிராபாத் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஆகஸ்ட் 2024-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 280 வாகனங்கள் சேதமடைந்தன.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!