| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

இறந்த தாயின் உடலை 18 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் கொண்டு சென்ற மகன்

by admin on | 2025-01-24 09:50 PM

Share:


இறந்த தாயின் உடலை 18 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் கொண்டு சென்ற மகன்

சைக்கிளில் தாயின் சடலம்; 18 கி.மீ., தள்ளிச்சென்ற மகன் 

 

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 65 வயது மூதாட்டி இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டதால் இறந்த தாயின் உடலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்றார் மகன்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த ஜெபமாலை மனைவி சிவகாமியம்மாள் 65. மூன்று மகன்கள். மூத்த மகன் சவரிமுத்து கீழக்கடையத்தில் வசிக்கிறார் இரண்டாவது மகன் செல்வம் இறந்துவிட்டார். மூன்றாவது மகன் பாலன் 38 ,தாயை கவனித்து வந்தார். சிவகாமிக்கு தீவிர மன சிதைவு நோய் இருந்தது. இதற்காக அடிக்கடி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயை கொண்டு வந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பாலனுக்கும் ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் மனம் நலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாமியம்மாளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்திருந்தார். நேற்று காலை அவரது உடல்நிலை சீரியஸ் ஆனது. எனவே வேறு நபரை அழைத்து வரும்படி மருத்துவமனையில் பாலனிடம் கூறினர


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment