| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

கனமழை...! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-04-06 08:48 AM

Share:


கனமழை...! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது. கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் தலா, 15 செ.மீ., மழையும், அடையாமடை, பேச்சிப்பாறையில் தலா 13 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், ஊத்துக்குளி 12, திருப்பூர் வடக்கு பகுதியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், குளச்சல் எலந்தகுட்டை மேடு, திருப்பூர் தெற்கு பகுதியில் தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மாநில பகுதிகளின் மேலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.


கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஏப்ரல் 6 கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து, நாளை முதல், 11 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment