by admin on | 2025-01-24 09:46 PM
நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் மற்றொருவருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய ஆண்டிஅம்பலம் (40), அவரது மனைவி சீரின்ஜெனத் (40) ஆகிய 2 பேரையும் நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள், ஆண்டிஅம்பலத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,10,000/- அபராதமும், அவரது மனைவி சீரின்ஜனத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!