by Vignesh Perumal on | 2025-04-05 03:27 PM
திண்டுக்கல் அருகே வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கழுத்தை அறுத்து கருங்கல்லை கட்டி கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்த வழக்கில் சின்னாளப்பட்டி போலீசார் ராஜா (எ)சிக்கனம்பட்டி ராஜா, சரத்குமார், பிரகாஷ், சரவணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் சின்னாளப்பட்டி போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி் சரண் அவர்கள் ராஜா(எ) சிக்கனம்பட்டி ராஜா, சரத்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சரவணன் தற்கொலை செய்து கொண்டார், மற்ற இருவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!