by Vignesh Perumal on | 2025-04-05 03:13 PM
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார்கள். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார் 3,500 காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டபம் பகுதியில் இருந்து ராமநாதசுவாமி திருக்கோவில் வரை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வகையில், ராமேஸ்வரம் கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் நீராடவும், சாமி தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நண்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். அவசர தேவைக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!