| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

'4' இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...! அதிரடி பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2025-04-05 02:49 PM

Share:


'4' இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...! அதிரடி பறிமுதல்...!

தென்னிந்திய திரைப்படத்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 29 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் சில காட்சிகளில் 'நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ஆங்கிலேயர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தற்போது இல்லாவிட்டாலும் இந்த அணையால் மக்களுக்கு ஆபத்து உள்ளது. அணையை காப்பாற்ற தடுப்பணை என்னும் சுவர்களால் எந்த பயனும் இல்லை. இங்கு அணையே இல்லாமல் இருந்தால்தான் சரியாகும்' என்ற வசனமும் அதில் உள்ளது.

அதுமட்டுமின்றி, படத்தில் வரும் நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாக கூறினாலும் 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட அணை முல்லைப் பெரியாறு என்பது தான் நிதர்சனம். முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக தேக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அத்தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மழை அதிகரித்து அணை நீர்மட்டம் உயரும்போது அணை உடைவது போன்ற கிராபிக் காட்சிகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இச்சூழலில் கேரளா மாநிலத்தில் இருக்கும் சில இயக்கங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ கோகுலம் குழும நிறுவனங்களின் உரிமையாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.


அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் கொச்சியில் உள்ள கோகுலம் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் புகார் தொடர்பாக கோபாலனிடம் இதற்கு முன்னர் பலமுறை அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அவர் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது சென்னை, கோடம்பாக்கம் அலுவலகம், நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. இச்சோதனை ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 4 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment