by Satheesh on | 2025-04-05 02:48 PM
சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம். தர்பூசணியில் நிறம் ஏற்றி கலப்படம் செய்கின்றனர் என்று வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இவர், கெட்டுப்போன உணவு விற்பனைக்காக பிலால் பிரியாணி கடைக்கு பூட்டு போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று முன்தினம் பிலால் ஓட்டலுக்கு சோதனைக்கு சென்ற போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும், தர்பூசணி பழங்களை பொதுமக்கள் தாராளமாக வாங்கி சாப்பிடலாம் என்றும் குளிர்பான கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தான் துணை போகவில்லை என்றும் பேட்டி அளித்திருந்தார். பிலால் உணவகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது பணியிட மாற்றம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!