by Vignesh Perumal on | 2025-04-05 01:23 PM
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 156 அங்கன்வாடி பணியாளர், 1 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. மாவட்டத்தில் வட்டாரம்/திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனச்சுழற்சி விபரம் மாவட்ட திட்ட அலுவலகங்களிலும், அந்தந்நத வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், அங்கன்வாடி பணியாளர் ரூ.7700/-என்ற தொகுப்பூதியத்திலும், குறு அங்கன்வாடி பணியாளர் ரூ.5700/- என்ற தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர் ரூ.4100/- என்ற தொகுப்பூதியத்திலும் பணி நியமனம் செய்யபட்டு தொடர்ந்து 12 மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். மேற்கண்ட பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கான தகுதிகள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும். 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மேலும் ஆதரவற்ற பெண்கள் எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் 25 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 25 வயது முதல் 38 வயது வரை இருத்தல் வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான தகுதிகள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும். 20 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மேலும் ஆதரவற்ற பெண்கள் எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் 20 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 20 வயது முதல் 43 வயது வரை இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடம் நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தை மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவும், அதே கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதார் அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு (அ) அருகிலுள்ள வார்டு (அ) மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 07.04.2025 முதல் 23.04.2025 முடிய (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!