by Vignesh Perumal on | 2025-04-05 12:30 PM
பழனியில் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கவுன்சிலர் சுரேஷ் (திமுக) பேசியதாவது: 'பழனி நகரில் 7வது வார்டு பகுதியில் குடிநீர் பைப்புகளில் மஞ்சள் நிறமாக குடிநீர் வருகிறது. ஏழாவது வார்டில் மூன்று நபர்களுக்கு மஞ்சள் காமாலை வந்துள்ளது. பழனி நகராட்சி எல்லை எங்கு ஆரம்பிக்கிறது. எங்கு முடிகிறது. நகராட்சி எல்லையில் பக்தர்களையும் பொது மக்களையும் வருக வருக எனவும், நன்றிகள் எனவும், ஆர்ச்சுகள் அமைக்க வேண்டும். சொத்து வரி, குடியிருப்பு பகுதிகளில் 30 ஆண்டு, 40 ஆண்டு, உள்ள வீடுகளில். புதிய அதிக வரிவிதிப்பு செய்வது முறையா..? பழனியில் வையாபுரி குளம் அடிவாரம் செல்லும் ரோட்டில், மேற்கு பக்கம் நான்கு திசைகளில், நடைபாதை சாலைகள் அமைத்து, நகரை அழகு படுத்த திட்டம் ஏதாவது உள்ளதா..? சிறப்பு நிலை நகராட்சியாக பழனி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முயற்சி எடுத்த, பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் அவர்களுக்கு நன்றிகள்' என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய நகராட்சி பொறியாளர் கூறியிருப்பதாவது: 'பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. மேலும் நகரில் விநியோகிக்கப்படும் குடிநீர் பரிசோதனைக்காக, மதுரை மாவட்ட குடிநீர் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பதிலளித்த தலைவர் உமா மகேஸ்வரி: 'குடிநீர் விநியோகம் பில்டர் செய்து கொடுக்கப்படும். பழனி நகராட்சி எல்லையில் ஆர்ச்சுகள் அமைக்கப்படும். நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி திட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
நிருபர்கள்- பாலாஜி, கதிரேசன் பழனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!