by Vignesh Perumal on | 2025-04-05 11:16 AM
ஆஷா பணியாளர்கள் (ASHA) அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் ஆவர். இவர்கள், இந்தியாவின் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் (NRHM) ஒரு பகுதியாகச் செயல்படுகின்றனர். இவர்கள் தற்போது தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் பரவலாக 2650 ஆஷா பணியாளர்கள் இருக்கிறோம். 2010-ல்தான் இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்தது. சுமார் 15 வருடமாக நாங்கள் 24 மணி நேரமும் பணி செய்கிறோம்.
குறிப்பாக, விருப்ப வேலை 2 மணி நேரம் மட்டும் என்று சேர்க்கப்பட்டு, 24 மணி நேரமாக மாறியுள்ளது. ஆயிரம் பேரும் ஒரு ஆஷா என்ற நிலை மாறி 3000 பேருக்கு ஒரு ஆஷா என விரிவாக்கம் அடைந்துள்ளது. மத்திய அரசின் 5750 ரூபாய் ஊதியம் வந்தாலும், வவுச்சர் அடிப்படையில் முவாயிரம், நாலாயிரம் மட்டுமே பலருக்கு கிடைக்கிறது.
மாநில அரசு இதுவரை எங்களுக்கு எந்த ஊதியமும் வழங்கவில்லை. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகியவை மத்திய அரசு ஊதியத்துடன், மாநில அரசு ஊதியமும் சேர்த்து 10, 12, 15, 18 ஆயிரங்கள் என அவர்களுக்கு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறும் நாங்கள் மிகுந்த சிரமம் அடைகிறோம். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கிடைக்க உங்களை நாடுகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!