by Vignesh Perumal on | 2025-04-05 09:38 AM
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் தனியார் பனியன் நிறுவனம் ஒன்று இயங்கிக் கொண்டுள்ளது. இன்று அதிகாலை திடீரென பனியன் நிறுவனத்தின் குடோனுக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந்த தீ விபத்து குறித்த விசாரணையில் தங்கவேல் என்ற நபருக்கு சொந்தமான அந்த தொழிற்சாலையில் பனியன் மற்றும் பனியன்களை பேக்கிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அங்கு நடைபெற்று வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இச்சூழலில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத சூழலில் திடீரென மின் விநியோகம் சீர்படுத்தப்பட்ட நிலையில், மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பனியன் கம்பெனியின் காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!