by Vignesh Perumal on | 2025-04-05 09:19 AM
இந்திய மைய வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'விரைவில் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அச்சடித்து வெளியிடப்பட உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களில் மையம் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரவின் கையொப்பம் இருக்கும்.
இந்த ரூபாய் நோட்டுக்களின் வடிவமைப்பு அனைத்து வகையிலும் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களை போலவே இருக்கும். கடந்த காலத்தில் மைய வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் அதில் தகவல் தரப்பட்டுள்ளது.
இந்திய மைய வங்கி முதல் முறையாக கடந்த மாதம் மைய வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியது. தற்போது இரண்டாவது முறையாக, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!