by Vignesh Perumal on | 2025-04-04 05:45 PM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மக்களவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவையின் வேலை நேரம் 118% க்கும் அதிகமாக இருந்ததாகவும் கூறினார்.
இருப்பினும் அவர் மேலும் கூறியதாவது: 'வக்ஃபு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது மற்றும் அவையின் கண்ணியத்திற்கு எதிரானது' என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அதுமட்டுமின்றி, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு உருவானது.
மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் அமர்வு மார்ச் 10 ஆம் ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.