by Vignesh Perumal on | 2025-04-04 09:06 AM
தலைநகர் சென்னையில் அண்ணாசாலை மவுண்ட் ரோட்டில் பிலால் என்ற பிரபலமான உணவகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த உணவகத்தில் ரமலான் பண்டிகைக்கு முதல் சென்ற 30 ஆம் தேதி சகோதரிகளான இரண்டு கல்லூரி மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து உணவருந்தி சென்றுள்ளனர். இவர்கள் 2 பேரும் மட்டன் குழம்பு சாப்பிட்டதாகவும் அதற்கு பிறகு இவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ராயப்பேட்டை மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதே போல் திருவல்லிக்கேணி பகுதியில் ஹோட்டல் பிலால் பிரியாணி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திலும் ரமலான் பண்டிகைக்கு முதல் நாள் இங்கு பீப் சாப்பிட்ட 55 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தண்டையார்பேட்டை மருத்துவ மனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருவல்லிக்கேணியில் செயல்படும் பிலால் பிரியாணி என்ற ஓட்டல் முன்பு திரண்டு முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். இதனால் தற்போது அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!