by Vignesh Perumal on | 2025-04-04 07:59 AM
அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் கோயில் 'வஞ்சி நகா்' சேரர்களின் ஆட்சிக் காலத்தில் பிரசித்தி பெற்ற நகரம் வஞ்சி. வஞ்சி நகரமே இன்று கரூர் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மதேவர் இந்தத் தலத்தில் படைப்புத் தொழிலைத் தொடங்கியதாகவும், அதனால், இந்த ஊர் கருவூர் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது 'அருள்மிகு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயம்.
திரேதாயுகத்தில் இந்தப் பகுதி இலந்தை வனமாக இருந்துள்ளது. அப்போது சிலர் கட்டட வேலைக்காக நிலத்தைத் தோண்டினார்கள். அப்போது ஒருவருடைய கோடரி பட்டு ஒரு பெரிய கல் உடைந்திருக்கிறது. அருகில் சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அங்கே ரங்கநாதர் சயனக் கோலத்தில் காட்சி தந்தார். கோடரி பட்டதால் பெருமாளின் திருமேனி பின்னப்பட்டுவிட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முசுகுந்த சக்கரவர்த்தி, பெருமாளின் சிலை இருந்த இடத்தில் புதிகாக ஒரு சிலையை சுதைச் சிற்பமாக வடித்து பிரதிஷ்டை செய்து, வழிபட்டதாக தல வரலாறு. பின்னப்பட்ட ரங்கநாதர் சிலை, அந்தக் கோயிலின் பின்புறம் இன்றும் இருப்பதைக் காணலாம்.
ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் காட்சி தரும் ரங்கநாதரின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மதேவர், தாமரை மலரில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். பெருமாளுக்கு அருகிலேயே ஶ்ரீதேவி தாயாரும், ஆண்டாளும் திருக்காட்சி தருகிறார்கள். மார்க்கண்டேயருக்கு அபயம் தந்து அருள் புரிந்ததால், ரங்கநாதர், 'அபய பிரதான ரங்கநாதர்' என்ற திருப்பெயர் கொண்டதாகவும் தலவரலாறு குறிப்பிடுகிறது. இங்கு பெருமாள் சுதை வடிவில் அருள்வதால் திருமஞ்சனம் கிடையாது.
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று மூலிகைகள் சேர்த்த எண்ணெய்க் காப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து 48 நாள்கள் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!