by admin on | 2025-01-21 10:35 AM
காவலர் மாரியப்பன்
தேனி மாவட்டம் குமுளி காவல் நிலையத்தில் தலைமை காவலர் மாரியப்பன் (44) தேசிய அளவில் நடைபெற்ற மாஸ்டர் கேம் விளையாட்டுப் போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் குமுளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு துறையில் ஆர்வம் உடைய காவலர் மாரியப்பன் அவ்வப்போது தமிழக அளவில் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று வந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு திருச்சியில் 35 கிலோ எடையை பற்களில் 60 வினாடிகள் கடித்துத் தூக்கி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சென்னையில் அகில இந்திய காவலர்களுக்கு இடையேயான போட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முன்னிலையில் 60 கிலோ எடையை பற்களால் கடித்து தூக்கி சாதனை செய்துள்ளார். இந்தச் சாதனையை பாராட்டி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ₹5000 ரொக்க பணம் கொடுத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் மேற்கண்ட பற்களால் எடை தூக்கும் போட்டியில் பங்கெடுத்து தொடர் சாதனை படைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நான்காவது நேஷனல் மாஸ்டர் கேம்ஸ்-ல் மூன்று போட்டிகளில் பங்கெடுத்து அதற்காக பழக்கங்களை வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு கொண்ட ஆசியன் பசிபிக் கேம்ஸில் ஹாமர் த்ரோன் என்ற வட்டி எறிதல் விளையாட்டில் சில்வர் மெடல் வாங்கி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டுத் துறை மட்டுமல்லாது தான் பணியாற்றும் காவல்துறையிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2024 ஆம் ஆண்டுக்கான முதல்வர் விருதை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பெற்றார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மாரியப்பனின் பாராட்டி கௌரவித்தனர்.
நடப்பு 2025 ஆம் ஆண்டு இம்மாதம் சென்னையில் நடைபெற்ற ஆல் இந்தியா மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் & கேம்ஸ் சாம்பியன்ஷிப் - 2005 ஆண்டிற்கான தேசிய அளவிலான போட்டிகளில் வட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகியவற்றில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.
தொடர்ந்து விளையாட்டுத்துறையில் சாதனை படைத்து வரும் காவலர் மாரியப்பனை பல்வேறு தரப்பினரும் உயர் அதிகாரிகளும் பாராட்டிவரும் நிலையில் லோயர் கேம்ப் -ல் உள்ள குமுளி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வனிதா மணி,சார்பு ஆய்வாளர் ஆசிர்வாதம் ஆகியோர் தலைமையில் சக காவலர்கள் மாரியப்பனுக்கு சால்வை அணிவித்தும்,இனிப்புகள் பரிமாறியும் பாராட்டுகளை தெரிவித்தனர்.விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் காவலர் மாரியப்பன் அடுத்து நடப்பாண்டில் சீனாவில் உள்ள தைபே சிட்டியில் நடைபெறவிருக்கும் வேர்ல்ட் மாஸ்டர் கேம்ஸில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கெடுக்கும் இப்போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் குண்டு ஏறுதல் வட்டி ஏறுதல் சங்கிலி கொண்டு எரிதல் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தனது பேரை பதிவு செய்துள்ளார். காவலர் பணிக்கிடையே விளையாட்டுத் துறையிலும் சாதனை புரிந்து வரும் மாரியப்பன் தமிழ்நாட்டிற்கும் காவல்துறைக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!