| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!

by Vignesh Perumal on | 2026-05-02 03:01 PM

Share:


மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் PG விடுதிகளின் மாதாந்திர வாடகையை உயர்த்தப்போவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி முதல் வணிக சிலிண்டர் விலை சுமார் ரூ.990 முதல் ரூ.1,013 வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,259.50 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த சிலிண்டர் விலை உயர்வு விடுதி உரிமையாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு IT ஹாஸ்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் மே 5, 2026 முதல் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன.


அனைத்து வகையான விடுதிகளிலும் ₹1000 முதல் ₹1500 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு விடுதிகளில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் இடத்தைப் பொறுத்து சிறிய அளவில் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓஎம்ஆர் (OMR), வேளச்சேரி, அண்ணா நகர் மற்றும் கிண்டி போன்ற பகுதிகளில் தங்கி வேலை செய்யும் ஐடி (IT) ஊழியர்கள் மற்றும் வெளியூர் மாணவர்கள் இந்த அறிவிப்பால் பெரும் கவலையடைந்துள்ளனர். ஏற்கனவே எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கும் விடுதி கட்டணமும் உயர்வது சாமானிய மக்களின் மாத பட்ஜெட்டை வெகுவாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சில விடுதிகள் மின்சார அடுப்புகள் மற்றும் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றன. இருப்பினும், மின்சாரக் கட்டணமும் அதிகமாக இருப்பதால் வாடகை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment