by Vignesh Perumal on | 2026-05-02 02:47 PM
மதுரை - நத்தம் உயர்மட்ட மேம்பாலத்தில் நிகழ்ந்த கோர விபத்தில், நத்தத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் உட்பட மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சித்திரைத் திருவிழாவைக் காணச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஸ்வா (21), அதே ஊர் முஸ்லிம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சல்மான்கான் (21) மற்றும் விக்னேஷ் (20) ஆகிய மூவரும் நண்பர்கள். மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவைக் காண்பதற்காக, மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மதுரை - நத்தம் மேம்பாலம் வழியாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (26) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலத்தின் மீது எதிர் திசையில் சென்றுள்ளார். திருப்பாலை அருகே மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தின் வேகத்தில் வாகனங்களில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த விஸ்வா, சல்மான்கான் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த மாதேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை தல்லாகுளம் போலீசார், படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மேம்பாலத்தில் ஒருவழிப் பாதையில் அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவிழா உற்சாகத்தில் மதுரைக்கு வந்த நத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நத்தம் மற்றும் மதுரை பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தல்லாகுளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !