by Vignesh Perumal on | 2026-05-02 02:29 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் மற்றும் 7 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கார் பழனியை அடுத்த சத்திரப்பட்டி டோல்கேட் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த மஞ்சுளா (38) மற்றும் 7 மாதக் குழந்தை அந்நியாஸ்ரீ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். காரில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் நைனார் மற்றும் சார்பு ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீகப் பயணம் அல்லது சுற்றுலா வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !