by satheesh on | 2026-04-27 05:12 PM
ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிப்பு - நிறுவனங்களில் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு!
கோடை வெயிலால் தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் உற்பத்தி அதிகரிப்பு. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது உணவுப் பாதுகாப்புத் துறை. ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தவும், கோடை காலம் முழுவதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியில் உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கவும் உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சோதனை நடத்துவதோடு, புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. மேலும், அளவுகளை குறைத்தும், விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாக கூறப்படும் நிலையில் அதனையும் கட்டுப்படுத்த வேண்டுமெனவும், காலாவதியான ஐஸ்கிரீம் தயாரிப்புகளை விற்பனையாளிடமிருந்து திரும்ப பெற்றதனை முறையாக அழிக்கப்படுகிறதா ? நிர்ணயம் செய்யப்பட்ட நிற கிருமிகள் பயன்படுத்தப்படுகிறதா ? எனவும் ஆய்வு செய்ய வேண்டுமென ஐஸ்கிரீம் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !