by satheesh on | 2026-04-20 05:49 PM
கயத்தாறு அருகே மண்ணுக்குள் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 221 மது பாட்டில்கள் பறிமுதல் - விற்பனையில் ஈடுபட்ட தாய் மகன் கைது :
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது தகவலின் அடிப்படையில் கயத்தாறு போலீசார் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது செட்டிகுறிச்சி முத்துகிருஷ்ணன் காலனியை சேர்ந்த சுடலைமணி மனைவி முத்துலட்சுமி (35) மகன் இசக்கிபாண்டி (19) ஆகிய இருவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர் . மேலும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் ஒயின்ஷாப் மூடப்படும் என அறிவித்த நிலையில் விற்பனைக்காக மது பாட்டில்களை வாங்கி வீட்டின் அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பது முதல்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது . மேலும் முத்துலட்சுமி மற்றும் மகன் இசக்கிபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தது மட்டுமின்றி விற்பனைக்காக வைத்திருந்த 180ml கொண்ட 221 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். தாய் மகன் இருவரும் சேர்ந்து மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகின்ற. 21,22,23 ஆகிய தேதிகளில் மது விற்பனைக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தடை செய்யப்பட்ட நாட்களில் மீறி யாராவது கள்ள மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !