by Vignesh Perumal on | 2026-04-19 12:14 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், ஒரு இளம் மாணவனின் இந்த முடிவு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அடுத்த மேலமறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மரிய டில்விஸ் (17) இவர் ஒரு தனியார் டுட்டோரியல் மையம் மூலமாகப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், மரிய டில்விஸ் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரிய டில்விஸ் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர், மாணவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுசீந்திரம் போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்துச் சுசீந்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தேர்வு பயம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா அல்லது குடும்பப் பிரச்சினை ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் மற்றும் கல்வி தொடர்பான அழுத்தங்கள் காரணமாக மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
தற்கொலை எண்ணம் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால், உடனடியாக அரசு உதவி எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். தமிழக அரசின் இலவச மனநல ஆலோசனை எண்: 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது மேலமறவன்குடியிருப்பு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !