by Vignesh Perumal on | 2026-04-16 02:09 PM
திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளியைக் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த வாலிபரைத் தாலுகா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு தொழிலாளியை மிரட்டிப் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பர் இந்திரன் என்பவருடன் கொட்டப்பட்டி குளக்கரை சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், செல்வம் மற்றும் அவரது நண்பரை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
அந்த நபர் தன்னை ஒரு "பெரிய ரவுடி" என்று கூறி, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் செல்வத்தின் கழுத்தில் வைத்துள்ளார். "சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன்" என மிரட்டி, செல்வத்தின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,200 பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
உயிர் பயத்தில் அதிர்ச்சியடைந்த செல்வம், உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் உலகநாதன் மற்றும் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், பணம் பறிப்பில் ஈடுபட்டவர் பொன்னிமாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன் என்பவரின் மகன் காடு (எ) அன்பழகன் என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அன்பழகனைத் தேடிய போலீசார், சில மணி நேரங்களிலேயே அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீட்கப்பட்டது. அவர் மீது கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக உள்ள நிலையில், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாலுகா போலீசார் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !