by Vignesh Perumal on | 2026-04-11 01:08 PM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக வேட்பாளரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார். இன்று அவர் நிலக்கோட்டை அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
வேட்பாளர் தேன்மொழி மெட்டூர் கிராமத்திற்குள் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அப்பகுதி பொதுமக்கள் அவரது வாகனத்தை மறித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் மெட்டூர் கிராமத்திற்குச் சரியான சாலை வசதி, முறையான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அவர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் இந்தக் கேள்விகளால் வேட்பாளருடன் வந்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரத் தோரணையில் கேள்வி கேட்ட மக்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர், கேள்வி கேட்ட கிராம மக்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், வேட்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மெட்டூர் கிராம மக்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். "ஓட்டு கேட்க வரும்போது மட்டும் வரும் அரசியல்வாதிகள், எங்கள் குறைகளைக் கேட்க மறுப்பது ஏன்?" என்று அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியாகக் கேள்வி கேட்ட மக்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பிரச்சாரத்தில் வன்முறை வெடித்திருப்பது குறித்துத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அறிக்கை கோரியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் (ஏப்ரல் 23), நிலக்கோட்டை தொகுதியில் நிலவும் இந்த மோதல் போக்கு தேர்தல் களத்தைப் பதற்றமடையச் செய்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !