by Vignesh Perumal on | 2026-04-11 12:56 PM
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே நிலத்தகராறு காரணமாகத் தனது தம்பி மனைவியை விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அடுத்த எல்லப்பட்டி கிராமத்தில், சொத்து மற்றும் நடைபாதை தொடர்பான குடும்பப் பகை ஒரு பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது.
எல்லப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜின் மனைவி சின்னபாண்டியம்மாள் (47).
தங்கராஜின் மூத்த சகோதரர் கருப்பசாமி (58), இவர் ஒரு விவசாயி.
கருப்பசாமி மற்றும் தங்கராஜ் ஆகியோரது விவசாயத் தோட்டங்கள் அருகருகே உள்ளன. இந்தத் தோட்டங்களுக்குச் செல்லும் நடைபாதை மற்றும் சொத்துப் பகிர்வு தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இது குறித்துப் பலமுறை வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன.
சம்பவத்தன்று சின்னபாண்டியம்மாள் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, நடைபாதை தொடர்பாகச் சின்னபாண்டியம்மாளிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கருப்பசாமி சின்னபாண்டியம்மாளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி, சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, நாராயணன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து சின்னபாண்டியம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையில் ஈடுபட்ட கருப்பசாமியைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைத் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் கருப்பசாமி தற்போது திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சொத்துத் தகராறில் அண்ணனே தம்பி மனைவியைக் கொலை செய்த சம்பவம் எல்லப்பட்டி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு இடையே இந்தத் துரித நடவடிக்கையை மேற்கொண்ட அம்பாத்துரை போலீஸாரைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !