by Vignesh Perumal on | 2026-04-11 10:34 AM
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா-வை ஆதரித்து பிரபலத் திரைப்பட நடிகர் பொன்னம்பலம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசு குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கம்பம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு ஆதரவாக நடிகர் பொன்னம்பலம் கம்பம் நகரின் முக்கிய வீதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் பேசிய பொன்னம்பலம், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
அதாவது, "திமுகவுக்கு நீங்கள் வாக்களித்ததால் இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது," என்று குற்றம் சாட்டினார்.
தற்போதைய சூழலில் திமுக ஒரு தீய சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்தத் தீய சக்தியைத் தமிழகத்திலிருந்து அடியோடு அழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்கு மக்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.
ஒரு புதிய மாற்றத்தை நோக்கித் தமிழகம் நகர வேண்டும். தலைவர் விஜய் அவர்களின் கரத்தை வலுப்படுத்தவும், நேர்மையான நிர்வாகத்தை வழங்கவும் ஜெகநாத் மிஸ்ராவுக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்," என்று அவர் பேசினார்.
கம்பம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா ஏற்கனவே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இப்பகுதியில் நன்கு அறியப்பட்டவர் என்பதும், கடந்த சில நாட்களாக ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. திரையுலகைச் சேர்ந்த பொன்னம்பலம் போன்ற பிரபலங்கள் இவருக்கு ஆதரவாகக் களமிறங்கியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றங்கள் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு மத்தியில், திரை நட்சத்திரங்களின் பிரச்சாரம் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. பொன்னம்பலத்தின் இந்த "தீய சக்தி" என்ற விமர்சனத்திற்கு திமுக தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !