by Vignesh Perumal on | 2026-04-11 10:17 AM
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த இளம் கைதி ஒருவர், சிறை வாசலிலேயே காவல்துறையினரைத் தள்ளிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அடைக்கம்பட்டி கிளைச் சிறை வாசலில், பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கைதி ஒருவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார்.
வருசநாடு பகுதியைச் சேர்ந்த கணேசன் (23). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாகப் போடி போலீசார் கணேசனைத் தேடி வந்த நிலையில், நேற்று அவரைப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
போலீசார் கணேசனை அடைக்கம்பட்டி சிறைக்கு அழைத்துச் சென்றபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு கருதி போலீசார் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (GH) சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, இன்று அதிகாலை மீண்டும் அவரை சிறையில் அடைப்பதற்காக போலீசார் அடைக்கம்பட்டி சிறை வாசலுக்கு அழைத்து வந்தனர்.
சிறை கதவு திறக்கப்படுவதற்கு முன்பாக, எதிர்பாராத விதமாகப் பாதுகாப்புக்கு வந்திருந்த இரண்டு போலீசாரைத் தனது பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் கணேசன் தப்பியோடினார்.
தப்பியோடிய கைதியைப் பிடிக்க முயன்ற போலீசாரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இருட்டான பகுதி என்பதால் அவர் எளிதாக மறைந்து தப்பினார்.
இச்சம்பவம் குறித்து கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கணேசனின் சொந்த ஊரான வருசநாடு மற்றும் கடமலைமயிலை பகுதிகளில் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கைதி ஒருவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடியது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதியை அழைத்துச் சென்றபோது போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !