by satheesh on | 2026-04-10 01:45 PM
பழனியில் அதிரடி! பல மாவட்டங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பலே திருடன் கைது
பழனி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன் ஒருவர் பழனி காவல் துறையினரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பழனி விவேகானந்தா சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாகனம் திருட்டு போனதாக ஒருவர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்களின் மேற்பார்வையில், சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது. அப்போது கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபரை விரைவாக அடையாளம் கண்டனர். பின்னர், போலீசார் குற்றவாளியை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் சையத் அபுதாஹிர் (தேனி மாவட்டம், பங்களா மேடு பகுதி) என்பவர் என தெரியவந்துள்ளது. இவர்மீது தேனி நகர், சின்னமனூர், பெரியகுளம் காவல் நிலையங்கள் மட்டுமின்றி மதுரை மாவட்டத்தின் ஜெய்ஹிந்த்புரம், உசிலம்பட்டி, கோவை மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரம், திருப்பூர் வடக்கு உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை கைது செய்த பழனி காவல் துறையினரின் விரைவான நடவடிக்கை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், இவர்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் இந்த வழக்கை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !