| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி - தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு ;

by satheesh on | 2026-01-20 08:41 PM

Share:


திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி  - தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங்  அழைப்பு ;

தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு நிரந்தரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு 2012-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2.0 புதிய வடிவம் (கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0) இவ்வாண்டு (2025-2026 ஆம்ஆண்டில்)  செயல்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டத்தில் பயிற்சியுடன் இளைஞர்கள் தங்களது அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடும் அறிவு, கணிணி மற்றும் மின்னஞ்சல்கள் பயன்பாடு, ஆளுமைதிறன், குழுவாக இணைந்து செயல்படுதல் போன்ற பல்வேறு மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுவதால் பயிற்சிக்குபின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது எளிதாகிறது. 
குறிப்பாக ட்ரோன் ஆப்ரேட்டர், மொபைல்போன் டெக்னீசியன், CNC இயக்கம், செவிலியர் பயிற்சி, ஜீனியர் சாப்ட்வேர் டெக்னாலாஜி, Al அனலிஸ்ட், 
வெப் டெக்னாலஜி, வேர் ஹவுஸ் மேற்பார்வையாளர், ICB  ஆப்ரேட்டர், சோலார் டிவி அமைத்தல், வெல்டிங் அட்வான்ஸ் பேட்டன் மேக்கர், மெடிக்கல் டெக்னீசியன் போன்ற அதிக வேலைவாய்ப்பு உள்ள பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.  
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி Kalvi Trust பயிற்சி நிறுவனத்தில்
IT Helpdesk Attendant பயிற்சியும் மற்றும் சின்னமனூர் JBM Swamy Trust பயிற்சி நிறுவனத்தில் Key Accounts Management Executive  Courier பயிற்சியும் வழங்கப்படுகிறது.  பயிற்சி காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். பயிற்சி காலத்தில் சீருடை, உணவு, தங்கும் இடம் வசதி, பாடபுத்தகங்கள் ஆகிய அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் 
மேலும், பயிற்சி முடித்த இளைஞர்களில் குறைந்தது 50% நபர்களுக்கு கட்டாய பணியமர்வும், 20% இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்புக்கான உதவியும் வழங்கப்படும். பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.1270/- வீதம் ஆறுமாதங்களுக்கு ஊக்கத்தொகையும் பயிற்சியாளருக்கு வழங்கப்படும் 
மேலும்,  பட்டியலின பிரிவினருக்கு 25%, மலைவாழ் பிரிவினருக்கு 2%, சிறுபான்மையினருக்கு 15% மற்றும் பெண்களுக்கு 39% (ஒட்டுமொத்தமாக) என பயிற்சியில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  
விருப்பமுள்ள இளைஞர்கள்  தேனி மாவட்ட திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்)   அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது 155330 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு  கொண்டு பயிற்சி குறித்த  தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இணை ஆசிரியர்  ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment