| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

வக்கீல் என்று கூறி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பழகி பணம் பறிப்பு....!!!

by admin on | 2026-01-18 06:53 PM

Share:


வக்கீல் என்று கூறி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பழகி பணம் பறிப்பு....!!!

சேலம் மாவட்டம் ஓம லூர் போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக இருப்பவர் பூபதி (வயது 29).இவர் கடந்த மே மாதம் கொலை வழக்கு தொடர்புடைய 2 பேர் மீது வழக்கு பதிந்த போது காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி குரவனூர் பகுதியை சேர்ந்த குமரேசன் மகள் அலமேலு (வயது 25) என்பவர் தான் வக்கீல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, இவர்கள் மீது போலியாக வழக்கு போட்டு உள்ளீர்கள் என சப்இன்ஸ்பெக்டர் பூபதியிடம் பேசியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கமாகியுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் பூபதியிடம் போலி வழக்கு போட்டு உள்ளீர்கள், இவர்களை வெளியே  எடுப்பதற்காக கடனாக பணம் வேண்டும் எனக்கூறி அலமேலு சிறுக சிறுக ரூ.92 ஆயிரம் ரூபாய்யை சப்இன்ஸ்பெக்டர் பூபதியிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே சப்இன்ஸ்பெக்டர் பூபதியும், அலமேலுவும் பல நேரங்களில் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக  பூபதி தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு அலமேலுவிடம் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊமக்கவுண்டம்பட்டி பகுதிக்கு வந்து பணத்தை வாங்கி செல்லுமாறு  இரவு 11 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரை அலமேலு வரவழைத்துள்ளார். அதன்படி நள்ளிரவில் சப்இன்ஸ்பெக்டர் அங்கே சென்றார்.அப்போது இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் போட்டோ,வீடியோ எடுத்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டி அவர் கழுத்தில் இருந்த 3.5 பவுன் தங்க நகையை பிடுங்கிக் கொண்டு அவர் செல்போன் மூலம் 27 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் பெற்றுக் கொண்டனர்.மேலும் கத்தியை காட்டி,இதை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவோம் எனக்கூறி விட்டு 5 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து சப்இன்ஸ்பெக்டர் பூபதி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில், அலமேலு வக்கீல் அல்ல என்பதும், 12-ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு வக்கீல் என கூறிக்கொண்டு அடிக்கடி வக்கீல் உடையில் போலீஸ் நிலையத்திற்கு வந்து கட்டப்பஞ்சாயத்து பேசி வந்ததும் தெரியவந்தது. அலமேலு மற்ற 4 பேருடன் சேர்ந்து மூளையாக இருந்து செயல்பட்டு பணம், நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அலமேலு மற்றும் ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் (36).செல்லா(28),திருமால்அழகன் (21), பிரவீன்குமார் (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment