by admin on | 2026-01-18 06:42 PM
திண்டுக்கல் மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் நிலைய சரகங்களில் நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்ற கடந்த 09.012026 முதல் 17.012026 வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 174 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்ட விபரம்.
பொருட்டு உட்கோட்ட காவல் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள பிடியாணைகளை உத்தரவுப்படி அனைத்து துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு திண்டுக்கல் நிறைவேற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.A.பிரதீப் அவர்களால் தக்க அறிவுரை வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்றும் பொருட்டு கடந்த 09.01.2026 முதல் 17.01.2026 வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 எதிரிகளும், திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 42 எதிரிகளும், பாலியல் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளும். கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 எதிரிகளும் மற்றும் 12 காயவழக்குகள் உட்பட மற்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 104 எதிரிகள் ஆக மொத்தம் 174 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான சரித்திர பதிவேடு ரவுடியான தினேஷ்குமார் (28) த.பெ. செந்தில்குமார். மோர்ப்பட்டி, வடமதுரை என்பவருக்கு கடந்த 28.08.2025 ஆம் தேதி முதல் பிடியாணை இருந்து வந்த நிலையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசிய தகவல் மூலம் அவர் கோவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மேற்படி தனிப்படையினர் கோவையில் இருந்த எதிரியை கடந்த 12.01.2026 ஆம் தேதி கைது செய்து பிடியாணை நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் கடந்த 28.10.2025 முதல் பிடியாணையில் இருந்த சரித்திர பதிவேடு ரவுடியான ஜெயக்குமார் (25), த.பெ. ஜெகதீசன், பெருமாள்கோவில்தெரு. ரவுண்டு ரோடு புதுார். திண்டுக்கல் என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சரத்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கடந்த 12.012026 ஆம் தேதி மேற்படி எதிரியை திண்டுக்கல் ரவுண்டு ரோடில் வைத்து கைது செய்து பிடியாணை நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான சரித்திர பதிவேடு ரவுடியான காடு என்ற அன்பழகன் (28), த.பெ. குருநாதன் பொன்மாந்துறை என்பவருக்கு கடந்த 30.10.2025 முதல் பிடியாணை
நிலுவையில் இருந்த வந்த நிலையில் திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அங்கமுத்து தலைமையில் தனிப்படையினர் தகவலின்பேரில் எதிரியின் இருப்பிடம் கண்டறிந்து மதுரையில் இருந்த எதிரியை கடந்த 11.01.2026 ஆம் தேதி பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பிடியாணை நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
> அம்மையாநாயக்கனுார் காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான ஆனந்தன் (37), த.பெ. ராஜேந்திரன். ஆவாரம்பட்டி என்பவருக்கு கடந்த 11.11.2025 ஆம் தேதி முதல் பிடியாணை நிலுவையில் இருந்து வந்த நிலையில் எதிரியானவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்தவர் சொந்த ஊருக்கு வந்த தகவல் தெரிந்து அம்மையநாயக்கனுார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பாண்டி என்பவரால் கடந்த 1101.2026 ஆம் தேதி பிடித்து பிடியாணை நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நிலக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு எதிரிகளான 1) முரளிதரன் (41), த.பெ. பாஸ்கரன், வி.ஒ.சி.நகர், மதுரை மற்றும் முத்துப்பாண்டி (43), த.பெ. ராசு, மேட்டுப்பெருமாள் நகர், டி.வாடிப்பட்டி, மதுரை ஆகியோருக்கு கடந்த 11.11.2025 ஆம் தேதி முதல் பிடியாணை நிலுவையில் இருந்து வந்த நிலையில் நிலக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சத்தியக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளின் அலைபேசி அழைப்புக்கள் மூலம் அவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டு மேற்படி தனிப்படையினர் கடந்த 1201.2026 ஆம் தேதி இருவரையும் கைது செய்து பிடியாணை நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், கடந்த 01.01.2026 முதல் 17.01.2026 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களான கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரெளடிசம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 26 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டும் நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்றவும், ரௌடிசம், கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்09842337244
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!