by admin on | 2026-01-17 06:47 PM
சென்னை - பல்லாவரம் காவல் நிலையத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய ஆண், பெண் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.நடனத்தைக் கைதட்டி ரசித்த 21 காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கடும் கண்டனம் சென்னை பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய காவலர்கள் மீது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் பண்டிகை, காவல் நிலையங்களில் எளிமையாகவும் ஒற்றுமையுடனும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில்,
இவ்வருடமும் பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜ் அவர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.பொங்கல் என்பது விவசாயத்தை போற்றும் விழாவும், இயற்கைக்கு நன்றி கூறும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும் ஆகும். இது மத அரசியலோ, மத மோதலோ அல்ல. இன்றைய காலகட்டத்தில் அனைத்து மதத்தினரும் பொங்கலை ஒரு சமூக ஒற்றுமை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்” மேலும் “விழாவின் உண்மை தன்மையை புரியாமலோ அல்லது தவறான தகவல்களின் அடிப்படையிலோ காவலர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது” தமிழக காவல்துறையினர் விடுமுறை இன்றி, 24 மணி நேரமும் மக்கள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் அர்ப்பணிப்பு மிக்க துறையைச் சேர்ந்தவர்கள். அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் செயல்படும் காவலர்கள், ஒருநாள் சிறிது நேரம் தங்கள் சக ஊழியர்களுடன் பொங்கல் கொண்டாடியது எப்படி தவறாக கருதப்படலாம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது..பொங்கல் கொண்டாடிய ஒரே காரணத்திற்காக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தது மனிதநேயமற்ற நடவடிக்கை என்றும், இதனால் காவலர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்றும் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கருதுகிறது இதையடுத்து, தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து, பொங்கல் கொண்டாடிய ஒரே காரணத்திற்காக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை, அவர்கள் முன்பு பணியாற்றிய அதே காவல் நிலையங்களிலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!