| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்த நினைவு கட்டடம்....!!! அமைச்சர்கள் பார்வை.....!!!!

by admin on | 2026-01-17 06:38 PM

Share:


போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்த நினைவு கட்டடம்....!!!  அமைச்சர்கள் பார்வை.....!!!!

சிவகங்கையில்மாண்புமிகு கூட்டுறவுத்துறை  அமைச்சர்  திரு.கேஆர்.பெரியகருப்பன்  அவர்கள்  மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆகியோர், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட       சிராவயல் கிராமத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்தது நினைவாக கட்டப்பட்டு வரும் அரங்கம் மற்றும் காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் வீறுகவியரசர் முடியரசனார் அவர்களுக்கு திருவுருச்சிலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை  அமைச்சர்  திரு.கேஆர்.பெரியகருப்பன்  அவர்கள்  மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (17.1.2026) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட  சிராவயல் கிராமத்தில், சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்தது நினைவாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் அரங்கம் மற்றும் காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் வீறுகவியரசர் முடியரசனார் அவர்களுக்கு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், திருவுருச்சிலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை          அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்     திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப., அவர்கள், இணை இயக்குநர் (நினைவகங்கள்) திரு.கு.தமிழ்செல்வராஜன் அவர்கள், தேவகோட்டை சார் ஆட்சியர்   திரு.ஆயுஷ் வெங்கட் வட்ஸ், இ.ஆ.ப., அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (திருப்பத்தூர்) திரு.செல்வகுமார் அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், 



-2- திருப்பத்தூர் வட்டாட்சியர் திரு.மாணிக்கவாசகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.bஇந்நிகழ்வுகளில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவிக்கையில்,  சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் பொருட்டும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகச்செம்மல்களை என்றென்றும் போற்றி பாதுகாக்கும் வண்ணம், நினைவு மண்டபங்கள் அமைத்து பாதுகாத்து வந்தத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவார்கள். அவ்வழியில், சிறப்பான ஆட்சியினை  தமிழகத்தில்  நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின்  அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கௌரவிக்கும் பொருட்டும், இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்து பேசியதன் நினைவாக, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சிராவயல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரங்கம் அமைப்பதற்கென, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 22.1.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து,   

-3- ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  அரங்கம் தொடர்பான பணிகள் குறித்து இன்றையதினம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சிலை அமைப்பதற்கென நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.  அதனைத்தொடர்ந்து, காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் வீறுகவியரசர் முடியரசனார் அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்                                    ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில்  திருவுருச்சிலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதுபோன்று, மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கென பாடுபட்டவர்களை கௌரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலைகள் ஆகியவைகளை அமைத்து, எதிர்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு, தலைசிறந்த முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழந்து வருகிறார்கள் என  மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தனர்.

 

தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment