by Vignesh Perumal on | 2026-01-15 01:02 PM
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்த 'சமத்துவ பொங்கல் விழா' இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆத்தூர் முன்னாள் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெய்சங்கர் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
காவல் நிலைய வளாகம் முழுவதும் தோரணங்கள் மற்றும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
பணியில் இருக்கும்போது சீருடை அணியும் காவலர்கள், இவ்விழாவிற்காக அனைவரும் ஒரே மாதிரியான புத்தாடைகளை (வேட்டி, சட்டை) அணிந்து வந்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட மண்பானையில், புது அரிசியிட்டுப் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர்.
பொங்கல் பானையில் பால் பொங்கி வந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என உற்சாகமாக முழக்கமிட்டுத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொங்கல் தயார் ஆனதும், அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளுக்குப் படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் சரவணன் மற்றும் முன்னாள் நீதிபதி ஜெய்சங்கர் ஆகியோர் காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பணி நெருக்கடிகளுக்கு இடையே, காவலர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து கொண்டாடிய இந்தச் சமத்துவ பொங்கல் விழா, காவலர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!