| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பாதயாத்திரை பக்தர்களுக்காக புற காவல் நிலையம் அமைக்கப்பட்டு பிஸ்கட் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கல்....!!!

by admin on | 2026-01-14 08:15 PM

Share:


பாதயாத்திரை பக்தர்களுக்காக புற காவல் நிலையம் அமைக்கப்பட்டு பிஸ்கட் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கல்....!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கானது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் தைப்பூசத் திருவிழாவானது 26.01.26 அன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பாதையாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை மேற்கொள்ள ஏதுவாக பழனி உட்கோட்ட எல்லையான ஒட்டன்சத்திரம் பைபாஸ் அருகிலுள்ள ஹோட்டல் கீரின்லேண்ட அருகே சத்திரப்பட்டி காவல் நிலைய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதனை இன்று 14.01.2026 தேதி மருத்துவர் P.சாமிநாதன், இ.கா.ப அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிஸ்கட் குளிர்பான மற்றும் கால் வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டது. 


மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வழித்தடங்களில் 07 இருசக்கர வாகன ரோந்து நியமிக்கப்பட்டுள்ளது  பழனி உட்கோட்ட எல்லைக்குள் நுழையும்போதே Public Address System மூலமாக பக்தர்களுக்கென்று அமைக்கப்பட்ட சிமெண்ட் பாதையில் மட்டும் செல்லுமாறும் இரவு நேரங்களில் தங்குவதற்கென்று ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்குமிடங்களில் தங்கி பின்னர் காலையில் பாதயாத்திரை செல்லுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுவருகிறது.


பக்தர்களுக்கு ஒளிரும் கைப்பட்டைகள் மற்றும் ஒளிரும் கைகுச்சிகள் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பாதையாத்திரை பக்தர்கள் சிமென்ட் பாதையை மட்டும் பயன்படுத்த காவலர்கள் Public Address System மூலமாக அறிவுரை வழங்கி வருகிறார்கள். சிமெண்ட் பாதை இல்லாத இடங்களில் சாலையின் இடது ஓரத்தில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு ஒளிரும் ரிப்பன்கள் வழிநெடுக கட்டப்பட்டு பாதுகாப்பாக பாதயாத்திரை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்கென சாலை ஓரங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்கள் இரவு 10.00 மணிக்கு மேல் நடப்பதை தவிர்த்து கொள்ள காவலர்கள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.  9842337244.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment