by satheesh on | 2026-01-14 08:05 PM
யானைகள் இறப்பு- தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்;
வேலூர்: யானை தந்தங்களுடன் மூன்று இளைஞர்கள் கைது — கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் நீடிக்கும் மர்மமும் குழப்பமும். பேரணாம்பட்டு வனப்பகுதியில் யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் சூழலில், யானை தந்தங்களுடன் மூன்று இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளையும் பொதுமக்களையும் கடும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பாஸ்மார்பெண்டா மலைக் கிராம வனப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 7 வயதுடைய ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்துகிடந்தது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் சிந்தக் கனவாய் கிராம ஓடையில் சுமார் 6 வயதுடைய மற்றொரு ஆண் யானை தும்பிக்கையில் ரத்தக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அண்மையில், சாத்கர் மலை அல்லேரி பகுதியில் ஒரு குட்டி யானை, ஒரு பெண் யானை மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று யானைகள் ஒரே நேரத்தில் அழுகிய நிலையில் இறந்துகிடந்தது, வனத்துறையினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.. இந்த தொடர் யானை உயிரிழப்புகள் தொடர்பாக, தமிழக வனத்துறை சிறப்புப் புலனாய்வு பிரிவு இயக்குநர் ராகுல் தலைமையில், மண்டல வனப் பாதுகாவலர்கள் பெரியசாமி, மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், பாஸ்மார்பெண்டா மற்றும் அல்லேரி பகுதிகளில் உயிரிழந்த ஆண் யானைகளின் தந்தங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. “தந்தங்களை கண்டறிந்தால் யானைகளின் மர்ம மரணங்களின் பின்னணி வெளிச்சத்திற்கு வரும்” என்ற கோணத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வேலூர் மாவட்டம் அரவட்லா கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (21) என்பவர், தனது உறவினர்களான சேராங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணி (22) மற்றும் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (24) ஆகியோருடன் சேர்ந்து, யானை தந்தங்களை சேராங்கல் வனப்பகுதியில் பாறைகளுக்கு இடையே மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் மூவரையும் கைது செய்து, பதுக்கி வைத்த தந்தங்களை கைப்பற்றினர். ஆனால், கைப்பற்றப்பட்ட தந்தங்கள் சமீபத்தில் உயிரிழந்த யானைகளுக்குச் சொந்தமானவை அல்ல; அவை சுமார் 40 வயதுடைய யானையின் தந்தங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் விசாரணை மேலும் சிக்கலானது. இதன் மூலம், இந்த யானை எங்கு, எப்போது உயிரிழந்தது? சமீபத்தில் இறந்த யானைகளின் தந்தங்கள் தற்போது யாரிடம் உள்ளன? என்ற கேள்விகள் எழுந்து, புலன் விசாரணையில் புதிய புதிய மர்மங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பல பகுதிகளில் ஒரே காலகட்டத்தில் யானைகள் உயிரிழப்பது தற்செயலா, அல்லது திட்டமிட்ட வனவிலங்கு குற்றமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இது தனிப்பட்ட மூன்று இளைஞர்களின் செயல் அல்ல; ஒழுங்கமைக்கப்பட்ட வனவிலங்கு குற்ற வலையமைப்பின் (organized wildlife crime network) ஒரு பகுதியாக இருக்கலாம். நடுவணர்கள், கடத்தலாளர்கள், வாங்குபவர்கள் யார் என்பதே இன்னும் கண்டறியப்படவில்லை. யானை தந்தங்களை சட்டவிரோதமாக வைத்திருப்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதும் Wildlife Protection Act, 1972-ன் கீழ் கடும் குற்றமாகும். குற்றவாளிகள் தப்பித்தால், அது மற்றவர்களுக்கு தவறான “துணிச்சலை” அளிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கைது மட்டுமல்லாமல், வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை, பிணை (bail) எதிர்ப்பு நடவடிக்கை,விரைவான விசாரணைக்கான Fast-track courts, ஒவ்வொரு யானை உயிரிழப்புக்கும் post-mortem, forensic analysis, தந்தங்களின் DNA profiling, தமிழ்நாடு–கர்நாடகா–கேரளா மாநிலங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வு, ஒவ்வொரு யானை மரணத்திற்கும் வெளிப்படையான public status report என்பவை அவசியமாக்கப்பட வேண்டும். ஒரு யானை உயிரிழப்பது” என்பது தனிச்சம்பவம் அல்ல.*அது ஒரு சூழலியல் எச்சரிக்கை (Ecological Warning).* இப்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த பாதிப்பு யானைகளுக்கு மட்டுமல்ல — முழு வனச் சூழலுக்கும் தான்.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!