by satheesh on | 2026-01-14 05:11 PM
தேனி மாவட்டம்: கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காவும், விவசாயத்திற்காகவும் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்கள். கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு தேனி – குமுளி நெடுஞ்சாலையில் லோயர்கேம்ப் பகுதியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான ஜனவரி 15-ஆம் தேதி அன்று அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, ஆண்டுதோறும் பொங்கல் வைத்து, பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் பரதநாட்டியம், நையாண்டி மேளம், தப்பாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், மேலும், இவ்விழாவில் சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் சமத்துவப் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், இவ்விழாவில் கலந்து கொள்ள வருகை தருகின்ற விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!