| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனியில் தமிழர்களின் ஆண்கள் பயன்படுத்துகின்ற பாரம்பரிய வேட்டி அணிந்து பொங்கல் விழாக்களில் மாசு காட்டிய தேனீ கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!

by admin on | 2026-01-14 04:20 PM

Share:


தேனியில் தமிழர்களின் ஆண்கள் பயன்படுத்துகின்ற பாரம்பரிய வேட்டி அணிந்து பொங்கல் விழாக்களில் மாசு காட்டிய தேனீ கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!

தேனி மாவட்டம் தமிழர் திருநாளாம்  தைப்பொங்கல் திருநாளை  சிறப்பாகக் கொண்டாடும் வகையில்  நடைபெற்ற  சமத்துவப் பொங்கல்  விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார். 

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் இன்று (14.01.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில்  நடைபெற்ற *"சமத்துவப் பொங்கல்"* விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார். 


தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்துத் தொழில்களுக்கும், அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவில் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்  பாரம்பரிய உடை அணிந்து  பங்கேற்றனர். 


அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு  அனுப்பிய பொங்கல் வாழ்த்துச் செய்தி மடலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுய உதவிக்குழு மகளிர்களிடம் வழங்கி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்முன்னதாக,  வடபுதுப்பட்டி ஊராட்சியில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.   இந்நிகழ்வில்  திட்ட இயக்குநர்கள் திருமதி அபிதா ஹனீப் (ஊரக வளர்ச்சி), திருமதி சந்திரா (மகளிர் திட்டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராகவன், திருமதி புவனேஷ்வரி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment