by Vignesh Perumal on | 2026-01-14 12:51 PM
சென்னை மாநகரின் பழமை மாறாத கட்டடங்கள், கடற்கரை மற்றும் வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றுலாப் பயணிகள் எளிதாகக் கண்டு களிக்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை உலா என்ற புதிய சுற்றுலாப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் எத்தனையோ வரலாற்று இடங்கள் இருந்தாலும், அவற்றை வரிசையாகச் சுற்றிப் பார்ப்பதற்கான பிரத்யேகப் பேருந்து வசதி குறைவாகவே இருந்தது. இதனைப் போக்கும் வகையிலும், சிங்காரச் சென்னையின் சுற்றுலாவை மேம்படுத்தவும், பழங்காலத் தோற்றம் கொண்ட பேருந்துகளைக் கொண்டு இந்தச் சுற்றுலாத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களுக்கு எனத் தனித்தனியாகப் பேருந்து நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வார நாட்கள் (திங்கள் - வெள்ளி) மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னையின் அடையாளங்களாகத் திகழும் 16 முக்கிய இடங்களை இந்தப் பேருந்து இணைக்கிறது. இதில் இடம்பெற உள்ள சில முக்கியப் பகுதிகள், எழும்பூர் அருங்காட்சியகம், மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், சாந்தோம் தேவாலயம், கபாலீஸ்வரர் கோவில், புனித ஜார்ஜ் கோட்டை, போர் நினைவுச் சின்னம், வள்ளுவர் கோட்டம் இந்தப் பேருந்துகள் நவீன வசதிகளுடன் கூடியவை என்றாலும், தோற்றத்தில் பழங்காலப் பேருந்துகளை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.நகரின் அழகை ரசிப்பதற்கு ஏதுவாகப் பெரிய ஜன்னல்கள் மற்றும் சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் அல்லது குறிப்புகள் வழங்கப்பட உள்ளது.
வெளிமாநில மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார். இந்தத் தொடக்க விழாவில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மெரினா கடற்கரைச் சாலையில் இந்தப் பேருந்து வலம் வரும்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!