by Vignesh Perumal on | 2026-01-14 12:35 PM
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பகுதி நேர ஆசிரியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கடந்த சில நாட்களாகத் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாகப் பின்வரும் சலுகைகளை அறிவித்தார்.தற்போது ரூ.12,500 ஆக இருக்கும் பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம், ரூ.2,500 உயர்த்தப்பட்டு இனி ரூ.15,000 ஆக வழங்கப்படும். இதுவரை பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத விடுமுறை காலத்தில் ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது (ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே சம்பளம்). இனி வரும் காலங்களில் மே மாதத்திற்கும் ரூ.10,000 ஊதியமாக வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் ஊதியம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் குறித்தும் அமைச்சர் முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக முடிந்துள்ளன. "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் எனது குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, அவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் விரைவில் நிறைவேற்றுவார்" என அமைச்சர் உறுதி அளித்தார். ஊதிய விகிதத்தில் உள்ள வேறுபாடுகளைச் சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இறுதி கட்ட விவாதங்கள் நடைபெற்று வருவதால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, சுமார் 12,000 குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். இடைநிலை ஆசிரியர்களின் போராட்டமும் அரசின் இந்த உறுதியான பேச்சால் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!